Keerthy Suresh:’கல்கி 2898 A.D’ படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

Advertisements

கல்கி 2898 A.D படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளதாகப் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கல்கி 2898 A.D’. இந்தப் படத்தில் ‘பைரவா’ என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். சமீபத்தில் பிரபாஸின் ‘பைரவா’ தோற்றத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது படக்குழு.

இந்தப் புகைப்படத்தில் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க மிரட்டலாக இருக்கிறது. முழுமையான கறுப்பு நிற ஆடையுடன், தலையில் கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

இந்தப் படத்தைப் பிரமாண்ட பட்ஜட்டில் வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது, பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்தப் படம், புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும். இப்படம் மே 9, 2024 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாகப் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் நடிகையாக இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகப் பணியாற்றி உள்ளாராம். இந்தப் படத்தில் பைரவாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகப் புஜ்ஜி என்கிற ரோபோ நடித்து வருகிறது. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் தான் டப்பிங் செய்துள்ளாராம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *