வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று, நாளையும் அரசு நிகழ்ச்சிகளில் மு.க ஸ்டாலின் பங்கேற்ப்பு

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று, நாளையும்  நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பங்கேற்க்க உள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10.25 மணிக்கு புறப்பட்டசாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பயணம் செய்தார்.

காட்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கும் முதலமைச்சருக்கு துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.அங்கிருந்து காரில் வேலூர் நகருக்கு புறப்படும் முதல்வருக்கு சாலையின் இருபுறமும் நின்று கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கட்டப்பட்ட பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *