மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையமானது அதன் ஆணையர் உள்பட சுமார் எட்டு அதிகாரிகளை கொண்ட குழுவுடன் மார்ச் 1 ஆம் தேதி மாநிலத்திற்கு சென்று மார்ச் 1 மற்றும் மார்ச் 2 ஆம் தேதிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களையும் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கலந்தாலோசிப்பு நடத்த திட்டமிடப்பட்திருந்தாங்க.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு இந்த மாதம் இறுதியில் அதாவது வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது எனவும், அதனைத் தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி ஈடன் கார்டனில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் தற்போது கூடுதலாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும், மேலும் மார்ச் 3 ஆம் தேதி முக்கிய யாத்திரையான டோல் யாத்திரை அனுசரிக்கப்படுவதாலும் இதனால் இந்த சமயத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணையமானது தனது மேற்கு வங்க வருகையினை ஒத்தி வைக்குமாறு கேட்டு இருந்தாங்க.
மேற்கு வங்க மாநில அரசின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையமானது மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, குழுவின் மேற்கு வங்க வருகையை ஒத்தி வச்சி இருக்காங்க.இருப்பினும், கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அத்தேர்தல் ஆணையக் குழு கூட்டம் நடத்த புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் அறிவிச்சிருக்காங்க.
கூறியிருந்தோம. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தாரு. இதற்கிடையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பே மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அறிவிப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் செவ்வாயன்று கூறியிருந்தது.
ஆணையத்தின்படி, வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் தேர்தல்களை அறிவிக்க முடியும். அதே நாளில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, பிப்ரவரி 28 ஆம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான இறுதி தேதி என்று கூறியது. “தர்க்கரீதியான முரண்பாடுகள்” அல்லது “வரைபடம் செய்யப்படாத பிரிவுகள்” சரிபார்ப்பு முழுமையடையவில்லை என்றால், ஆணையம் படிப்படியாக பட்டியல்களை வெளியிடுவதைத் தொடரலாம் என்றும் தெளிவுபடுத்தியிருக்காங்க.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக புதிய வாக்குச் சாவடி மறுசீரமைப்புக்கான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் மேலும் அறிவிச்சு இருக்காங்க. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) இன்னும் முடிக்கப்படாததால், தற்போதுள்ள 80,681 வாக்குச் சாவடிகள் மாறாமல் இருக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கு வங்கத்தைப் போலவே தமிழகமும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் இங்கும் பள்ளிக்கல்வித் தேர்வுகள் மற்றும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்போகும் தேர்தல் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது .

