Advertisements

தமிழகமெங்கும் தமிழக வெற்றிக்கழக பிரச்சார பயணம் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் அந்த கட்சியின் தலைவர் விஜய் மகன் யாருக்கு ஆதரவு என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது .
தனது நீண்ட கால சினிமா வாழ்க்கையை விட்டு விட்டு நடிகர் விஜய் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக அரசியல் களத்தில் கால் பதித்திருக்கிறார் அவரது அரசியல் வருகை தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் அவர் நடத்திய மாநாடுகள் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது அதேபோல் திருச்சியில் தொடங்கிய அவரது தேர்தல் சுற்றுப்பயணம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது .
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசி வருபம் அவர் தமிழக அளவில் மிகப் பலமான கட்சி திமுக இந்திய அளவில் மிகப் பலமான பாஜக ஆகியவை வீழ்த்தப்படும் என்று பேசி வருகிறார் .
அவரைக காண்பதற்காக வரும் திரளான கூட்டத்தினரும் நடிகர் விஜய்யை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள்
இதற்கிடையே திமுகவினர் நடிகர் விஜய் குறித்து தற்பொழுது பரப்புரை செய்து வருகிறார்கள் . அதில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக தான் வெற்றி பெறும் விஜய் அதற்கு பிறகு காணாமல் போய்விடுவார். திமுகவை எதிர்கொண்டு அவரால் அரசியல் செய்ய முடியாது என்று பேசி வருகிறார்கள்
இந்ஙநிலையில் நடிகர் விஜயின் மகன் சேசன் சஞ்சய் குறித்து ஏராளமான தகவல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன . சேஷன் சஞ்சய் எல்லோருக்கும் அறிமுகமானவர்தான் நடிகர் விஜய்யுடன் நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடல் மூலம் ஆடி பாடி தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சேசன் சஞ்சய் .
அவர் வெளிநாடு சென்று சினிமாவை இயக்குவது குறித்து படித்துவிட்டு தற்பொழுது சென்னை திரும்பி இருக்கும் அவர் புதிய பட வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார் . பிரபல லைக்கா நிறுவனம் அவரது படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது சந்திப் கிஷோர் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் . வெளிநாடுகளில் கனடா உள்பட பல இடங்களிலும் தமிழ்நாட்டில் சேலத்திலும் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
இந்தப் படத்தில் கதை அம்சம் மிகவும் பிரமாதமாக இருக்கிறது என லைக்கா நிறுவனம் விமர்சனம் செய்திருக்கிறது .
இதற்கிடையே கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் தலைவர் ஜிகே மணி இல்ல திருமண விழாவில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டார் .
ரேஷன் சஞ்சை சினிமா படங்களை இயக்குவதில் மிகவும் ஆர்ஸமாக இருந்து வருகிறார் . அவரை பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சினிமாவில் நடிக்கும் படி கேட்டுக் கொண்ட போதிலும் எனக்கு கேமரா முன்பாக நிற்க முடியாது என நடிக்க மறுத்து விட்டார் .
இதற்கிடையே சேசன் சஞ்சய் தனது அடுத்த படத்திற்கும் தாவி விட்டார் . சேசன் சஞ்சயின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சொந்தமாக நடத்தி வரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தயாரிக்கப் போகிறது .
சினிமாவில் இருந்து ஒதுங்கி முழு நேர அரசியல் செய்ய போகிறேன் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜயின் மகன் சேஷன் சஞ்சய் படத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக சொல்லி இருக்கிறார் .
தற்பொழுது சினிமாவில் மிகவும் பிசியாக இருக்கும் சஞ்சய் குறித்து அவரது தந்தை விஜய் கூறும் பொழுது என் மகன் விருப்பத்தில் நான் தலையிட மாட்டேன் அவனுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது . சினிமாவில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறான். எனவே அவனது மனம்போன போக்கில் சுதந்திரம் தந்திருக்கிறேன் நிச்சயமாக அவன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் .
இதற்கிடையே விசேஷம் என்னவென்றால் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் வெளிவரும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வெளிவரும் முதல் படமாக ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது . இதற்கிடையே சேசன் சஞ்சிய் தீவிரமான திமுக பிரியர் என்று கூறப்படுகிறது .
அவருக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து திமுக அபிமானியாக இருந்து வருகிறார் . அவரது தந்தையின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது எனது தந்தையின் அரசியலுக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது . எனக்கு அரசியல் தெரியாது நான் அதில் தலையிடவும் விரும்பவில்லை . ஆனால் என் தந்தை வெற்றி பெறுவார் என்பது மட்டும் எனக்கு தெரியும். அவர் எதைச் செய்தாலும் நல்லது தான் செய்வார் அதையும் துணிச்சலாக செய்வார் என தெரிவித்துள்ளார் .
இதனிடையே உங்கள் தந்தைக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத்திற்கு நீங்கள் பிரச்சாரம் செய்வீர்களா உதவிகள் செய்வீர்களா என்று கேட்கப்பட்ட போது நான் எந்தவித அரசியல் தலையிடும் இல்லாமல் வாழ விரும்புகிறேன். எனது உலகம் சினிமா உலகம் இதை விட்டு நான் வெளியே வரவில்லை என தெரிவித்துள்ளார் .
இருந்த போதிலும் தந்தைக்கு ஆதரவாக எந்த வித அரசியல் நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டேன் என தெரிவித்திருக்கும் சேசன் சஞ்சய் ஓட்டு போடுவதாக இருந்தால் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார் என இப்பொழுது திமுக தொண்டர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
Advertisements




