லயோலா முன்னாள் மாணவர்கள் விழா – நடிகர் சூர்யாவுக்குச் சிறப்பு விருது!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நடிகர் சூர்யா, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 12 பேருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றிய இக்கூட்டத்தில், கல்லூரியின் துணைத்தலைவர் அந்தோணி ராபின்சன், ‘ஜெசுட்’ சென்னை மாகாணத் தலைவர் பிரிட்டோ வின்சென்ட் மற்றும் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக, பென்ஜமின் செரியன், சி.ராஜ்குமார் (வழிகாட்டும் ஒளி விருது), திலிப் ஆர்.வெல்லோடி, விஜய் சங்கர் (வணிகத் தலைவர் விருது), காவல் துறை அதிகாரி எஸ்.ஜெயக்குமார், ஐ.ஏ.எஸ் அதிகாரி கேத்தரின் சரண்யா (சிறந்த சேவைக்கான விருது) உள்ளிட்ட 12 பேருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் நடிகர் சூர்யாவுக்குப் படைப்பாற்றல் சிறப்பு விருதும், விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜுக்கு விளையாட்டு சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, முன்னாள் மாணவர்கள் தினத்தின் தலைவர் ராபின் எம்.ஏ.ஜேக்கப் நன்றியுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *