Sanatan Issue: சாமியார்மீது 5 பிரிவுகளில் வழக்கு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு, 10-கோடி ரூபாய் அறிவித்த போலி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சாரியா மீது, மதுரை காவல்துறையினர் 5-பிரிவுகளின் கிழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சனாதனம் கொசு, டெங்கு, கொரொனா போன்று கொடிய நோய் அதனை வேரோடு வெட்டி அழிக்க வேண்டும் என்று உதயநிதி சொன்னாலும் சொன்னார், அவரது கருத்து இந்துக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.சனாதன தர்மத்தின் மீது மிகுந்த மரியாதையும், அதனைக் கடைபிடித்து வரும் இந்துக்கள் உதயநிதியின் கருத்துக்கு எதிராகக் குரல் எழுப்பி வரும் நிலையில், பிரபலங்கள், இந்து மத தலைவர்கள், போதகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அயோத்தியைச் சேர்ந்த பரஹம்ச ஆச்சாரியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி அறிவித்து இருந்தார். இது தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பேசும் பொருளாய் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு, ரூபாய் 10 கோடி அறிவித்த, அயோத்தியைச் சேர்ந்த போலி சாமியார் பரஹம்ச ஆச்சாரியார் மீது மதுரை காவல்துiறியினர் 5-பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதில், கலக்கத்தை தூண்டுதல், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5-பிரிவுகளில் மதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்தச் சாமியாரைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *