Lok Sabha Elections 2024: 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது!

Advertisements

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பரப்புரை மேற்கொள்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து அமராவதியில் பேரணி நடத்துகிறார்.

89 தொகுதிகளில் நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

புதுடெல்லி:நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 6-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இதன் காரணமாகத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பரப்புரை மேற்கொள்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து அமராவதியில் பேரணி நடத்துகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *