
தளபதி விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் சார்பில், ஏழை மக்களுக்கு 7 புதிய வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில், வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய்… கடந்த இரண்டு வருடங்களாகவே, தொடர்ந்து அரசியலில் அதிக ஆர்வம் கட்டி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் திடீர் எனத் தன்னுடைய கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு, அரசியலுக்கு வருவதையும் உறுதி செய்தார்.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படம் மற்றும் அடுத்ததாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தை நடித்து முடித்தபின்னர், முழுமையாகத் திரையுலகை விட்டு விளக்குவேன் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். ரசிகர்கள் விஜய்யின் இந்த முடிவைக் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொண்டாலும், தளபதியை அரசியலுக்கு முழு மனதோடு வரவேற்பதாகக் கூறினர்.
விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில், ‘தமிழக வெற்றிக் கழகம்’ போட்டியிடாது என்பதை விஜய் உறுதி செய்த நிலையில், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், களம் காண உள்ளதாக அறிவித்தார்.
தளபதியுடன் கூட்டணி வைக்கப் பல கட்சிகள் தயாராக இருக்கும் நிலையில், தளபதி 234 தொகுதியிலும் தனித்தே போட்டியிடும் முடிவில் உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போது விஜய் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது அரசியல் பணிகளையும் தன்னுடைய நிர்வாகிகள் மற்றும் புஸ்ஸி ஆனந்த் மூலம் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், தளபதி விஜய்… கும்மிடி பூண்டியில் வீடு இல்லாமல்… ஏழ்மை நிலையில் இருந்த மக்களுக்கு, ஓட்டு வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார். அந்த வகையில் 7 வீடுகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டு அதனைப் புஸ்ஸி ஆனந்த் திறப்பு விழா செய்தார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.


