Kalaignar Nootrandu Vizha: சோனியா காந்தி, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு!

Advertisements

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, தி.மு.க. மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 14-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள தேசிய அளவில் மேலும் சில பெண் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *