Auto Traffic Rules – Fine: 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு!

மதுரை மாநகரில் 10 இடங்களில் நடத்திய ஆட்டோ வாகன தணிக்கையில் 613 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவின்படி சாலை விதிமுறைகளை மீறி இயங்கும் ஆட்டோமீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இன்று போக்குவரத்து காவல்துறை மற்றும் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து மதுரை மாநகரில் மதிச்சியம் தல்லாகுளம் தெற்கு வாசல் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 10 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அதில் விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டது.அதன்படி 301 மீட்டர் பொறுத்தாத ஆட்டோக்கள் 87 அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்கள் 21 ஓட்டுநர் உரிமமின்றி ஓட்டப்பட்ட ஆட்டோக்கள்,68 போக்குவரத்திற்கு இடையூறு செய்த வாகனம் இரண்டு மது போதையில் ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட மொத்தம் 613 வழக்குப் பதிவுகள் செய்யப்பட்டு 4,21,000 அபராதம் விதிக்கப்பட்டு விதிமீறல் ஈடுபட்ட 38 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வாகனங்களைச் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒப்டைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *