இந்திய நாள் பேரணியில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தணா பங்கேற்ப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்திய நாள் பேரணியில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தணா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நியூயார்க்கில் ஆண்டுதோறும் இந்திய நாள் கொண்டாடப்படுகிறது. 79ஆம் ஆண்டு விடுதலை நாளையொட்டி நடைபெற்ற இந்திய நாள் பேரணியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் இந்தியாவில் இருந்து நடிகர்கள் விஜய் தேவகொண்டா, ரஷ்மிகா மந்தணா, மாநிலங்களவை உறுப்பினர் சத்னாம் சிங் சந்து ஆகியோர் கலந்துகொண்டனர். விஜய் தேவரகொண்டாவுக்கும் ரஷ்மிகா மந்தணாவுக்கும் கிராண்ட் மார்சல்ஸ் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக இந்திய நாள் பேரணி இடையே கோகுலாஷ்டமி நாளில் இஸ்கான் சார்பில் ரத யாத்திரையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *