
தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள், இருவர் ஆண் ஆவர். இவர்களில் இருவர் குழந்தைகள். காயமடைந்தவர்களில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உள்ளனர். விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மும்பை ஹெச்பிடி மருத்துவமனை மற்றும் கூப்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதிகாலையிலேயே நடந்த இந்தச் சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



