Easter Festival 2024: சிறைச் சாலை பெண்கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் பிரான்சிஸ் பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவி பாரம்பரிய சடங்கை மேற்கொண்டார்.ரோமின் புறநகர்ப் பகுதியில் ரெபிபியா சிறைச் சாலைக்குச் சென்ற போப், பெண் சிறைக்கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டார்.

கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியதை தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து புனித வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகின்றது.

தங்கள் பாவங்களை நீக்குவதற்காக ஏசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்துகொண்டு உயிர்நீத்ததாகக் கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள். ஏசு உயிர் நீத்ததாகக் கூறப்படும் இந்த வெள்ளி புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. தாங்கள் செய்த பாவங்களுக்காகச் சிலுவையை சுமந்த ஏசு பட்ட பாடுகளை காண சகிக்க முடியாததால் இனி பாவங்களே செய்யப்போவதில்லையென இந்தப் புனித வெள்ளியில் உறுதியேற்றுக்கொள்வதாகவும் இந்தப் புனித வெள்ளி அனுசரிக்கபடுகின்றது.

இதையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்துவர்கள் தேவாலயன்களில் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தினர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் பிரான்சிஸ் பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவி பாரம்பரிய சடங்கை மேற்கொண்டார்.ரோமின் புறநகர்ப் பகுதியில் ரெபிபியா சிறைச் சாலைக்குச் சென்ற போப், பெண் சிறைக்கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *