
தமிழகத்திற்கு அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என மகிழ்ச்சியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்திற்கு பயணத்தை முடித்துகொண்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மனநிறைவுடனும் மாபெரும் வெற்றிபயணமாகவும் தமிழகம் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்திற்கு மொத்தம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்றும் இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமிழகம் மீது நம்பிக்கை வைத்து பத்து புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ள நிலையில் மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


