அட்டக்கத்தி தினேஷின் ‘வேட்டுவம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

பிரபல நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித்  தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் அட்டக்கத்தி தினேஷ் ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில், நடிகர் ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இதில், சபீர், அசோக் செல்வன், கலையரசன், ஃபகத் ஃபாசில், லிங்கேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித்  அறிவித்துள்ளார். பிரபல நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் அவரது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *