விண்ணில் பாய்ந்தது என்விஎஸ்-03 செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் நேற்று இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளில், அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோள் 12 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டதாகும்.
இந்த செயற்கைக்கோள் பொதுமக்களின் இருப்பிட சேவைகள், பேரிடர் மேலாண்மை, ரெயில்வே போக்குவரத்து மற்றும் தேசிய பாதுகாப்பு உள்பட பல்வேறு தேவைகளுக்கு பெரிதும் உதவும். இதைத் தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோள் புவிநீள் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *