தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா!

கஜகஜஸ்தானில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில்  இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

கஜகஜஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டி நடைபெற்றது. அதில் மகளிர்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றுப் போட்டியில், இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா, அமெரிக்காவைச் சேர்ந்த அபிகெய்ல் நெட்டேவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் மணிஷா பன்வாலா 0-6 எனப் புள்ளி கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8-6 எனப் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *