தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருவதாக TTV தினகரன் பேச்சு.!

எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருவதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் கோதண்டபாணி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், விஜயின் தலைமையை ஏற்கவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராகிவிட்டார் எனக் கூறினார்.

தொடர்ந்து திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளராக கோதண்டபாணி போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *