வக்பு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதால், அம்பானியின் ₹15,000 கோடி வீட்டிற்கு ஆபத்தா?

மும்பையின் அமைந்துள்ள, ஆண்ட்லியா என்று அழைக்கப்படும் ₹15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் கட்டிடம் ஆன்மீக பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சொத்து குறித்து ஏற்கனவே பல ஆண்டுகளாக பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.ஆன்டிலியா வீடு மும்பையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. இது மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. உலகிலேயே பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்ததாக இந்த வீடானது இரண்டாவது விலையுயர்ந்த வீடாக உள்ளது. இந்த வீடு தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி. இது தெற்கு மும்பையின் பரேட் சாலையில் அமைந்துள்ளது. இந்த வீடு ஆன்மிகப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆண்ட்லியா வீடு கட்டப்பட்ட இடத்தில் முகேஷ் அம்பானி 2010ஆம் ஆண்டில் 27 மாடிகள் கொண்ட வீடு கட்டியுள்ளார் எனவும், இந்த இடத்தை அம்பானிக்கு விற்றவர் கரீம் பாய் இப்ராஹிம் என்பவராகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கப்பட்டது என்றும், ஆதரவற்றவர்களுக்கு இல்லம் கட்டவும, பள்ளி எழுப்பி மாணவர்களுக்கு கல்வி வழங்கவும் என்ற நோக்கத்தோடு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது ஆனால் இந்த நிலத்தை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்தம் காரணமாக அம்பானியின் ₹15,000 கோடி வீட்டிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.சமீபத்தில், வக்பு வாரிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டத் திருத்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நிலுவையில் இருக்கும் வழக்கை விசாரித்து, ஆன்டிலியா வீடு அம்பானி குடும்பத்துக்கு சொந்தமானது இல்லை என்று தீர்ப்பு அளித்தால், அவர்கள் வீட்டை காலி செய்ய நேரிடும்.

சமீபத்தில் இந்த வீட்டின் மின் கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் 6 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுவதாகவும், ஒரு மாத மின்கட்டணமாக 70 லட்சம் ரூபாய் கட்டப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, அவர்களது மகன்கள் ஆகாஷ், ஆனந்த் மற்றும் அவர்களது மகள் இஷா ஆகியோர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வக்பு சட்டம் அமலாகியுள்ளதால் இது அம்பானிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு அம்பானி குடும்பத்திற்கு எதிராக வழங்கினால் அவர்கள் வீட்டையே காளி செய்ய வேண்டியிருக்கும். இந்நிலையில்  ₹15,000 கோடி வீட்டிற்கு ஆபத்து ஏற்படுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *