Vellayan Oorani Pillaiyar Koil: கும்பாபிஷேக அழைப்பிதழ் விநியோகம்!

தேவகோட்டை நகர பாஜக சார்பாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின்  கும்பாபிஷேகம் ஜனவரி 21ம் தேதியன்று நடைபெற உள்ளது.

இதைமுன்னிட்டு இந்தியா முழுவதும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாஅழைப்பிதழை பாஜக சார்பாக வழங்கப்படுவருகிறது.அதன் ஒருபகுதியாகத் தமிழகம் முழுவதும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாஅழைப்பிதழை பாஜக சார்பாகப் பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர பாஜக சார்பாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 21ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக அழைப்பிதழை  வெள்ளையன் ஊரணி பிள்ளையார் கோவிலில் வைத்துச் சாமி கும்பிட்டு விட்டுப் பெருமாள் கோவிலில் பூரண கும்பம் மரியாதையை ஏற்றுக்கொண்டு பொதுமக்களுக்குப் பத்திரிக்கை, அட்சதை, விபூதி பிரசாதம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

பாஜகவின் மாநிலம் மாவட்டம் மற்றும் நகரை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், அமராவதிபுதூர் சாரதா கோயில் மடத்தைச் சேர்ந்த சாராதேஸ்வரி ப்ரியம்பா, ராமகிஷ்ண ப்ரியம்பா, மற்றும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *