Gold Rate in Tamilnadu: மீண்டும் தாறுமாறாக எகிறும் தங்கம் விலை.. கவலையில் நகை்கப்பிரியர்கள்!

Advertisements

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து விலை தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக உயர்ந்து வருகிறது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள்மீதான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3000க்கும் மேல் தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,430-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 02) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,460-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,915-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,320-ஆக விற்பனையாகிறது.

அதேபோல், கோயம்புத்தூர் மற்றும் மதுரை தங்கம் நிலவரம் என்ன என்பதை பார்ப்போம். இன்றைய நிலவரப்படி கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,460-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,915-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,320-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *