
The 2023 G20 New Delhi Summit: இந்திய ஜி20 தலைமையின் ஒரு பகுதியாக, அமைப்பின் 20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவா்கள் மாநாடு (பி20 கூட்டம்), மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது.
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் 2 நாள் கூட்டத்தில் கனடா பங்கேற்காது எனச் சபாநாயகர் ரேமண்ட் காக்னே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கனடா அவைத் தலைவருடனான சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள்குறித்து விவாதிப்பேன் என ஓம் பிா்லா குறிப்பிட்டிருந்தாா்.

