Koyambedu – Kilambakkam: பேருந்துகள் கட்டணம் குறைப்பு!

Advertisements

கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் கட்டணம்  குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார்.

தென்தமிழகம் செல்லும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதே சமயம் கோயம்பேட்டில் இருந்து இனி பேருந்துகள் செல்லாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு புதிய சலுகை அறிவித்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளது.

இந்த  கட்டண  குறைப்பு  கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதைக் கருத்தில் கொண்டு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் ரூ.460 வரை அதிகபட்சமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் பயணி கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் அதே பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.430  செலுத்தினால் போதுமானது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *