Veg omelette: வெஜ் ஆம்லெட்!

Advertisements

முட்டையில் ஆம்லெட்டை காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு சைடிஷாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஒரு சிலருக்கு முட்டையில் ஆம்லெட் பிடிக்காது. அப்படி முட்டையில் ஆம்லெட் பிடிக்காதவர்களுக்கு இந்த வெஜ் ஆம்லெட் ரெசிபி மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதனால் உங்களுக்கு ஆம்லெட் சாப்பிட முடியவில்லை என்று கவலை வேண்டாம். இதில் வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு வீட்டிலே செய்து சாப்பிட்ட லாம்.!

வெஜ் ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள்:

மஞ்சள் பாசி பருப்பு- 1 1/2 கப்
வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 5
கேரட்- 1
காய்ந்த மிளகாய்- 1/2
மிளகு சீரகம்- 1 தேக்கரண்டி
சோடா உப்பு- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
பெருங்காயத் தூள்- 1/4 தேக்கரண்டி
இஞ்சி- தேவையான அளவு
கொத்தமல்லி– சிறிதளவு

வெஜ் ஆம்லெட் செய்முறை விளக்கம்:
                                         
முதலில் மஞ்சள் பாசி பருப்பை நீரில் ஊறவைத்து தோல் இல்லாமல் நன்றாக அலசித் தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டித் தனியாக வைக்கவும். அதன் பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் இந்த இரண்டையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். அடுத்ததாகக் கேரட்டை எடுத்துக் கொண்டு அதனைத் துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

அடுத்ததாக ஒரு மிக்சி ஜாரில் வடிகட்டி வைத்துள்ள பாசி பருப்புடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக அடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து முடித்தவுடன் மாவை ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்து வைத்துள்ள அடை மாவுடன்  நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கருவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். கலந்து வைத்துள்ள மாவுடன் மிளகு சீரகம் தூள் மற்றும் சோடா உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலந்த மாவை 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.


5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பைப் பற்ற வைத்து அதில் தோசை கல்லை வைக்க வேண்டும். கல் சூடேறியவுடன் அடை மாவை ஆம்லெட் ஊற்றுவது போல் தோசை கல்லில் ஊற்ற வேண்டும். அடுப்பை மீடியம் தீயில் வைத்து அந்த ஆம்லெட் மேலே எண்ணெய் தேவையான அளவு ஊற்றி ஆம்லெட் வெந்தவுடன் சாப்பிட வேண்டியது தான். அவ்வளவு தான் சுவையான வெஜ் ஆம்லெட் தயார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *