பாலியல் வன்மைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயது சிறுமி அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீடாக உதவி கேட்டதை சிலர் வீடியோ எடுத்த கொடூரம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் கேட்போரை அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. பாத்நகர் பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான தகவலில், உடலில் அரை நிர்வாணத்துடன் சிறுமி ஒருவர் உதவி கேட்டு ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டுகிறார். ஆனால், யாருமே அந்தச் சிறுமிக்கு உதவ முன் வர மறுத்ததுடன், ஒருவர் சிறுமி நடந்து செல்வதை வீடியோ பதிவும் செய்துள்ளார்.
2.15 மணி நேரம் 15 கி.மீ. தூரம் உதவி கேட்டு நடந்து சென்ற சிறுமி ஒரு ஆசிரமத்தை அடைந்துள்ளார். சிறுமியின் நிலை பார்த்து, அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை அறிந்த ஆசிரமத்தின் பாதிரியார் ஒருவர், சிறுமியின் உடலில் டவலை கட்டி விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குச் சிறுமியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளானதை உறுதிப்படுத்தினார். மேலும் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதுடன் அதிகளவில் ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் மேல் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனைக்குச் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய உஜ்ஜைன் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளி அடையாளம் தெரியவில்லை என்றும், போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், சிறுமியின் பாதிப்புக்கு ஆளான குற்றவாளியைப் பிடிக்கத் தடைப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி உத்தரபிரதேச மாநிலத்தின் பிரக்யராஜ் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
The injured minor girl, who reportedly walked for more than 8 kms and over two-and-a-half hours, was finally helped by a priest of an ashram where she reached on foot. #Ujjain #MadhyaPradeshNews
By: @harshtrivediii pic.twitter.com/EyN3OsI2ca
— Free Press Madhya Pradesh (@FreePressMP) September 27, 2023
மத்திய பிரதேசத்தில் மட்டும் 2019ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு அதிகளவில் பெண்கள் காணவில்லை என்ரும், 2021ம் ஆண்டில் மட்டும் மாநிலத்திலேயே 6,462 பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தகவல் கூறுகிறது. அதில் 50 சதவீதத்தினர் சிறுமிகள் என்பதும், ஒரு நாளைக்கு 18 பேர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாவது வருத்தமளிக்க கூடியது என்ற தகவலும் பகிரப்பட்டுள்ளது.

