Kayalpattinam: தேங்காய்ப்பால் மீன்குழம்பு!

தேவயானபொருள்கள்:

  • மத்திமீன் : 1 கிலோ.
  • வெங்காயம் : 250 கிராம்.
  • பச்சை மிளகாய் :10 நம்பர்,
  • தேங்காயெண்ணை :250 மில்லி.
  • இஞ்சி: 50கிராம்.
  • பூண்டு: 50 கிராம்’
  • சோம்பு: 1 தேக்கரண்டி.
  • சீரகம் : 50 கிராம்.
  • மிளகு :50 கிராம்.
  • கடுகு :1 தேக்கரண்டி.
  • தக்காளி :250கிராம்.
  • மஞ்சள் :1 தேக்கரண்டி.
  • சோம்புத்தூள் :10 கிராம்.
  • சீரகத்தூள் :10கிராம்.
  • தனியாதூள் :50கிராம்.
  • தேங்காப்பால் : 1 தேங்காய்.
  • புளி கரைசல் : 500 மில்லி.
  • மிளகாய் தூள் :10 கிராம்

கருவேப்பில்லை, கொத்தமல்லி, உப்பு, தேவையான அளவு

செய்முறை :

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்துத் தேவையான அளவு தேங்காயெண்ணை சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் கடுகு சேர்த்து கொள்ள வேண்டும்.

கடுகு பொரிந்ததும் வெங்காயம், கருவேப்பில்லை, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.பின்பு தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிய பின்மிளகாய் தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், புளிக்கரைசல் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதன்பிறகு தேங்காப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு மத்திமீன் சேர்த்து வேகவைத்து மல்லித்தழை தூவி இறக்கினால் காயல்பட்டினம்தேங்காய்ப்பால் மீன்குழம்பு ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *