திமுக கூட்டணியில் விரிசலா..? அதிரடி காட்டிய திருமா..!

Advertisements

தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியைக் காப்பாற்றும் வலிமை எனக்கில்லை’ என விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாகத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.”சாதிய மதவாத சக்திகளின் சதிவலைகளைத் தாண்டி, கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக கூட்டணியைக் கட்டிக்காத்த திருமாவளவன், இன்று ஏன் இத்தகைய முடிவை எடுக்க நேர்ந்தது குறித்தும் தவெக அமைச்சரவையில் விசிக இடம்பிடித்தது ஏன்? இதன் பின்னணியில் இருக்கும் திரைமறைவு செய்திகள் குறித்தும்  தற்போது விரிவாக பார்க்கலாம்.!

தமிழக வெற்றிக்கழக தலைமையிலான அரசின் அமைச்சரவை விரிவாக்கம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது..  அந்த வகையில் தற்போது வரை தமிழகத்தில் 35 அமைச்சர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவையில் 8 பட்டியலின் அமைச்சர்கள் நான்கு பெண் அமைச்சர்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இது வரலாற்று மாற்றமாக கருதப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில் தான் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை நிரூபிக்க வெளியில் இருந்து ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம்பெருமா என்ற கேள்வி எழுந்தது.

மேலும் ஐ.யு.எம்.எல், விடுதலை சிறுத்தைகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை பொதுவெளியில் ஏற்கனவே தெரிவித்திருந்தன.இந்த சூழலில்தான் நேற்றைய தினம் விசிக எம்.எல்.ஏ வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். மேலும் ஐ.யு.எம்.எல் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஷாஜகான் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த சூழலில்தான் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என சொல்லியிருந்த விசிக தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இதுகுறித்து இன்றையதினம் செய்தியாளர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “திமுக தலைவர் மு க ஸ்டாலின் இசைவோடு தான் ஆதரவோடுகள் நாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்தோம். எங்களை கலங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு” என தெரிவித்தார். அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற வேண்டும் என்பதை தமிழக வெற்றி கழகத்தினர் தங்களின் விருப்பமாக முன்மொழிந்தனர், இடதுசாரிகள் எப்படி வெளியே இருந்து ஆதரவு கொடுத்தார்களோ அப்படி தான் நாங்களும் ஆதரவு கொடுத்தோம்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பிறரின் யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது எனவும் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், எனக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட முடிவு. கட்சியில் நானும் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இருந்து இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், திமுக கூட்டணியை உடைக்க பல முனைகளில் இருந்து பல தரப்பினர் பல்வேறு முயற்சிகளை வெளிப்படையாகவே மேற்கொண்டார்கள். ஆனால் அதற்கு சற்றும் இணங்காமல் நான் உறுதியாக நின்றேன் என தெரிவித்தார். மேலும் “இதற்கு யாரும் மாற்றுக் கருத்து சொல்ல முடியாது எதிர் கருத்தை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு தேர்தலுக்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து என்னை குறி வைத்து சமூக ஊடகங்களில் விவாதித்தார்கள்.

என்னை குறிவைத்து சாதிய மதவாத சக்திகள் காய்களை நகர்த்தினார்கள். எமது உணர்ச்சிகளை தூண்டினார்கள். . திட்டமிட்ட அவதூறுகளை பரப்பினார்கள். ஆத்திரமூட்டினார்கள் எதற்கும் விடுதலை சிறுத்தைகள் மசியவில்லை இணங்க வில்லை என தெரிவித்தார்.

அதன் பிறகு தேர்தலுக்குப் பிறகு கூட்டணியை காப்பாற்றக்கூடிய வலிமை எனக்கு இல்லை. மேலும் காங்கிரஸ் எடுத்த முடிவை, இடதுசாரிகள் எடுத்த முடிவை தடுத்து நிறுத்தும் வலிமையும் எனக்கு இல்லை என அவர் தெரிவித்தார். ஆனால் இன்று சமூக விவாதங்களில் பேசக்கூடியவர்கள் என்னை மட்டுமே குறிவைத்து அவதூறு கருத்துக்களை பேசி வருகின்றனர் என அவர் வேதனை தெரிவித்தார்…

“கூட்டணி தர்மம் மற்றும் அரசியல் அதிகாரம் என இரண்டுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் திருமாவளவனின் இந்த முடிவு, திமுக கூட்டணியின் எதிர்காலத்தை எப்படி மாற்றப் போகிறது? விசிக-வின் இந்த ‘அமைச்சரவை பங்கேற்பு’ என்பது ஒரு தவிர்க்க முடியாத அரசியலா அல்லது அதிகாரத்திற்கான மாற்றமா என்று நீங்கள் நினைக்கும் கருத்துக்களை மறக்காமல்  பதிவிடுங்கள்.!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *