மின்வெட்டுக்கு காரணம் ஒருசில கருப்பு ஆடுகள் தான்.. அமைச்சர் நிர்மல் குமார்…!

ஒரு சில இடங்களில் மின்தடைக்கு தனிநபர்களும் காரணம் என்றும், மின்சாரத் துறை ஊழியர்கள் மத்தியில் உள்ள ஒரு சதவீத கருப்பு ஆடுகளை கண்டறிவோம் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்;களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது.

உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், ஒரு சில இடங்களில் தனிநபர்களின் தவறுகளால் மின்சாரம் தடைபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும்,  99-சதவீதம் சிறப்பாக |செயல்படும் மின்சாரத் துறை ஊழியர்கள் மத்தியில் உள்ள 1 சதவீத கருப்பு ஆடுகளை கண்டறிவோம் எனவும், யாருடைய தூண்டுதலால் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை எனவும், அம்மாதிரியான நபர்கள் மேல் இன்று இரவிற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சூரிய மின் உற்பத்தியில், பல இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும், மின்சாரத்துறையில் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டியிருக்கிறார்கள் என்றும் மின்சாரம் சீரமைக்க வேண்டிய இடங்களில் சீரமைத்து வருகிறோம். இதற்கு சில நாட்களோ, சில மாதங்களோ பிடிக்கலாம்.

கண்டிப்பாக முழுமையாக சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *