விசிக தேமுதிகவுக்கு கூட்டணி கதவை மூடிய எடப்பாடி; திருமா கதறல்..!

Advertisements

தமிழக அரசியலில் எப்பொழுது என்ன மாற்றம் நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு தினந்தோறும் அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன . அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவில் இருந்து விலகி அதிமுகவுடன் கூட்டணி சேரும் என்று பரபரப்பாக பேசப்பட்டது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரையில் திமுக மேல் இடத்தில் கடந்த தேர்இடத்தில்கூடுதல் இடங்களை கேட்டு பெற முடிவு செய்துள்ளது இதன் காரணமாக திமுக விசிக இடையே மறைமுகப் பிணக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தொல் திருமாவளவனும் ஆணித்தரமாக எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற போர் முழக்கத்துடன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை புறக்கணிக்கும் வகையில் தனது உரையில் தெரிவித்துள்ளார் . அவர் பேசும்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிபிஐ சிபிஎம் ஆகிய மூன்று கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2010 ஆம் ஆண்டு மண்டல வாரியாக பொது கூட்டங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்தார் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியும் அதே பாணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தனது சுற்று பயணத்தை தொடங்கும் போது எம்ஜிஆர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை கூட செலுத்தாமல் தனது பயணத்தை மேற்கொண்டது அதிமுக மத்தியில் ஒரு விதமான உளைச்சலை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அவரது இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தின் போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனை பார்த்து கேள்வி எழுப்பினார். அதிமுக பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்வதற்கு இந்த திருமாவளவன் யார்?என்று கேள்வி கேட்டதோடு சிபிஐ சிபிஎம் ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் இதன் மூலம் மேற்படி மூன்று கட்சிகளுக்கும் கூட்டணி கதவை எடப்பாடி பழனிச்சாமி மூடிவிட்டதாகவே தெரிகிறது.

இதற்கிடையே தேமுதிகவை பொருத்தவரையில் அதிமுக வுடனும் திமுகவுடனும் ரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தும் பொழுது 14 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்றும் அதிமுகவுடன் பேச்சு நடத்தும் பொழுது 23 தொகுதிகள் தர வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்

ஆனால் 23 தொகுதிகளுக்கு கொஞ்சம் கூட இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டதாக தெரிகிறது இதன் மூலம் தேமுதிக கூட்டணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு கட்டிவிட்டதாக தெரிகிறது . இந்த நிலையில் கட்சி தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொல் திருமாவளவன் இனி திமுகவை தவிர வேறு எங்கும் செல்ல மாட்டார் என்பது உறுதியானதால் இது திமுகவுக்கு லாபகரமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது மேலும் தேமுதிகவை தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது

ஆனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மட்டும்தான் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி சேரலாம் என்றே தெரிகிறது. இந்த நிலையில் அதிமுகவை நான் தோழமைக் கட்சியாகஃப் பார்க்கிறேன் அதிமுகவுக்கு நான் தம்பி என்று திருமாவளவன் பல்டி அடித்துள்ளார் . சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் தொல் திருமாவளவன் பேசும்போது அதிமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறிய போது தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க என முதலமைச்சர் ஜெயலலிதா என்னை வாழ்த்தினார் அவருக்கு தம்பியாக களத்தில் நான் பணியாற்றிய போது அதிமுக தலைவர்களுக்கு இது தெரியும்

பாஜகவில் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தற்பொழுது பழனிச்சாமி அறியாமல் இருக்கிறார் . அதிமுக பாஜக இடையே இணக்கமான உறவு ஏற்பட வேண்டும் என நான் எங்கேயும் சொல்லவில்லை அது என் ஆசையும் இல்லை திராவிட இயக்கமாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் அதிமுக பாஜகவால் பாதிக்கப்படக்கூடாது தனது செல்வாக்கை இழக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் விமர்சித்தேன்

அதிமுக வலுவாக இருந்தால் பாரதிய ஜனதா கட்சியால் காலூன்ற முடியாது பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்றினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கோ திருமாவளவனுக்கோ பாதிப்பு என்ற எண்ணம் அல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் சமுதாயம் பாதிக்கும் என்ற அச்சம் இருக்கிறது அதிமுக மீது எனக்கு பகை உணர்ச்சியோ வெறுப்புணர்ச்சியோ இல்லை

பாமக தேமுதிக ஆகியவை பாரதிய ஜனதா கட்சியோடு இருந்தபோது நான் எதுவும் பேசவில்லை அதிமுகவை தோழமை இயக்கமாக கருதுவதால் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம் தோழமை வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கருத்தினால் நான் எனது கருத்தை முன்வைக்க போவதில்லை என பேசி உள்ளார் . தற்பொழுது தமிழக அரசியலில் இது ஒரு புதிய தெருக்கூத்தாக பார்க்கப்படுகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *