Advertisements

வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு விலகுமா அல்லது தமிழக வெற்றி கழகம் பக்கம் ஆதரவு தெரிவிக்குமா என்ற பனிப்போர் நடைபெற்று வருகிறது . கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சி தற்போது அதிக தொகுதிகளை கேட்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும் போர்க் கொடி பிடித்து வருகிறது .
இதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் சம்மதிக்காத நிலையில் கூட்டணியை விட்டு விலகலாம் என காங்கிரஸ் முடிவு எடுத்ததாக பல தகவல்கள் வெளிவந்தன . இந்த நிலையில், இறுதி கட்டமாக டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனை முடிவில் திமுகவுடன் தான் கூட்டணி என்ற இறுதி முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது . தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு சதவீத வாக்கு வங்கி தான் இருக்கிறது. இருந்தபோதிலும் அகில இந்திய கட்சியாக இருப்பதாலும் ராகுல் காந்தி தலைமை தாங்குவதாலும் இந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது .
கடந்த தேர்தலை பொருத்தவரையில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது . இதில் பதினெட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் , வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு முப்பது தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் 3 அமைச்சரவை பதவி தர வேண்டும் என திமுக தலைமையிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது .
ஆனால் , இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தினுடனும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றி கழகம் தரப்பில்ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாகவும் 40 தொகுதிகளை ஒதுக்கி தருவதாகவும் பேசப்பட்டது. ஏற்கனவே நடிகர் விஜய்க்கும் ராகுலுக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைமை நிர்வாகிகள் வெளிப்படையாகவே திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆட்சி அதிகாரம் வேண்டும் என பேச ஆரம்பித்துள்ளனர் . இந்த நிலையில் குழப்பங்களை தவிர்த்து தேர்தலை சந்திக்கும் முகமாக டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
டெல்லியில் , உள்ள காங்கிரஸ்கட்சி தலைமை அலுவலகமான இந்திரா பவனில் இந்த கூட்டம் நடைபெற்றது . சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தி , பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை , முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கார்த்தி , ஜோதிமணி , விஜய் வசந்த் உள்பட மற்றும் 41 காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர் ,
இவர்கள் அனைவரிடமும் ராகுல் காந்தி தனித்தனியாக கருத்துக்களை கேட்டு அறிந்தார், அப்பொழுது பெரும்பாலானவர் திமுக பக்கமும் சிலர் தமிழக வெற்றி கழகம் பக்கமும் ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துக்களை ராகுல் காந்தியிடம் தெரிவித்தனர் . இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி பேசும்போது கூட்டணி குறித்து தனித்தனியாக பொதுவெளியில் பேச வேண்டாம் . அது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது .
திமுகவுடன் கூட்டணி என்பது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் முடிவு எடுக்கும் . அந்த ஆலோசனையின் படி தமிழக காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் . திமுகவை பொறுத்த வரையில் ஆட்சியில் பங்கு தர முடியாது என மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . எனவே ஆட்சியில் பங்கு கேட்டு தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம். அடுத்த கட்ட சந்திப்பின்போது தொகுதிகளை மட்டும் அதிகப்படியாக கேட்டு பாருங்கள் .
எந்த வகையிலும் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது நல்லது என தெரிகிறது இருந்த போதும் இது பற்றி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என பேசியுள்ளார். இதனை தொடர்ந்து , தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கூட்டணி குறித்து ராகுல் காந்தி தனித்தனியாக கேட்டு அறிந்தார் .
இது தொடர்பாக, பொதுவெளியில் எதுவும் பேசக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார் . தமிழக காங்கிரஸ் தலைமையிடம் கூட்டணி பற்றி முடிவு எடுத்து அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக காங்கிர கூட்டணி தொடர்பாக மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் .
அப்பொழுது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை கைவிட்டு முப்பது தொகுதிகள் கேட்கப்படும் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தெரிகிறது .
Advertisements



