Varanasi : புதிய வந்தே பாரத் இரயில்கள் இன்று முதல் தொடக்கம் – மோடி அறிவிப்பு..!

வாரணாசியில் புதிய வந்தே பாரத் இரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, அவர், இந்தியாவின் நவீன இரயில் கட்டமைப்பை விரிவுப்படுத்துவதற்காக வருகின்ற 8 ஆம் தேதி நான்குப் புதிய வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து, இந்த புதிய வந்தே பாரத் இரயில்கள், பனாரஸ் முதல் கஜூராஹோ வரை, லக்னோ முதல் சஹாரன்பூர் வரை, ஃபிரோஸ்பூர் முதல் டெல்லி வரை, எர்ணாகுளம் முதல் பெங்களூரு வரை ஆகிய வழித்தடங்களில் இரயில்கள் இயக்கப்படுகிறது.

தொடர்ந்து, இந்த உலகத்தரம் வாய்ந்த இரயில் சேவைகள் மூலம் பொதுமக்கள் எளிதான, வேகமான மற்றும் வசதியானப் பயணம் மேற்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *