Crime: காணாமல் போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்ப்பு!

Advertisements

தூத்துக்குடி மாவட்டம்நாசரேத் அருகே குடும்ப பிரச்சினை காரணதாாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட வெங்டிங் தொழிலாளி மனைவி இன்று திசையன்விளை அருகே உள்ள காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போன நிலையில் கணவனே அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து உயிரிழந்தார என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு பகுதியை சேர்ந்த பொன்பாண்டி என்பவரது மகன் அந்தோணி ராஜ். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத் அருகில் உள்ள வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த கோயில்ராஜ் என்பவரது மகள் கீதா ஜான்சி ராணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

வெல்டிங் வேலை பார்க்கும் அந்தோணி ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மனைவி கீதா ஜான்சி ராணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாசரேத் அருகில் உள்ள தைலாபுரம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு குடும்பமாக தங்கி உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி அந்தோணி ராஜிம் கீதா ஜான்சி ராணியும் தங்களது இரண்டு குழந்தைகளையும் வெள்ளரிக்காயூரனியில் உள்ள கீதா ஜான்சி ராணியின் தாய் வீட்டில் விட்டுவிட்டு திசையன்விளைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.திசையன்விளை அருகில் உள்ள தனியார் இன்ஜினியரிங் காலேஜ் எதிரில் உள்ள செம்மண் காட்டு பகுதியில் அவர்கள் சென்ற போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தைலாபுரத்தில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு சென்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி அந்தோணி ராஜின் இறந்துள்ளார். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்ச வீட்டின் கதவை உடைத்து அந்தோணி ராஜின் சடலத்தை மீட்டனர். அதன் பின்னர் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் ஜான்சி ராணியை கண்டுபிடிக்க முடியாததால் நாசரேத் காவல் நிலையத்தில் கீதா ஜான்சி ராணியை காணவில்லை என்று புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஜான்சி ராணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையிலான தனிப்படை போலீசார் நாசரேத் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.அப்பொழுதுதான் அந்தோணி ராஜ் 21 ஆம் தேதி மாலையில் மனைவி கீதா ஜான்சி ராணியுடன் இருசக்கர வாகனத்தில் நாசரேத்தில் இருந்து சாத்தான்குளம் வழியாக திசையன்விளை நோக்கி சென்றதும் மீண்டும் இருசக்கர வாகனத்தை திருப்பி அந்தோணி ராஜ் சிறிது தூரத்திலேயே தனியாக மாயமானதும் தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் திசையன்விளை ரோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் காலேஜ் எதிரே உள்ள காட்டுப் பகுதியில் போலீசார் இன்று தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பது தெரிய வந்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான காவல்துறையினர் காணாமல் போனதாக கூறப்படும் கீதா ஜான்சிராணி உறவினர்களை வரவழைத்து அந்த சடலத்தை உறுதி செய்து கொண்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஜான்சி ராணியின் உடலை அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக சொந்த கணவனே மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *