Arundhati Roy: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமா?

Advertisements

7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமா?

இந்தியாவின் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அழைப்பு விடுத்தமைக்காகவும் அழைப்புகளை ஆதரித்த குற்றத்திற்காகவும் சுசன்னா அருந்ததி ராய்க்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா, 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒற்றுமையைக் குலைக்கும்  நோக்கத்தில்  அழைப்பு விடுத்து  ஊக்குவித்ததாகக் கூறப்படும் சம்பவம்  தொடர்பாக ராய் மற்றும் ஒருவர் மீது வழக்குத் தொடருமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து, இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

1997 இல் புக்கர் பரிசை வென்ற ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ ஆசிரியரான அருந்ததி ராய் மற்றும் முன்னாள் காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் பொது இடங்களில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளைப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

நவம்பர் 2010 -ல் புது தில்லி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, “ஆசாதி – ஒரே வழி” என்ற பதாகையின் கீழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாட்டில் ராய் மற்றும் ஹுசைன் உள்ளிட்டோர் அக்டோபர் 21, 2010  பிரிவினை ஏற்படுத்தும்படியான உரைகளை நிகழ்த்தினர்.

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி மற்றும் சையது அப்துல் ரஹ்மான் கிலானி ஆகிய இரு குற்றவாளிகளும் வழக்கு நிலுவையில் இருந்தபோது காலமானார்கள்.ராய் மற்றும் பிறர் மீது தேச துரோகச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ மீதான முடிவு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A பிரிவு, மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதகமான செயல்களைச் செய்வது தொடர்பானது.

பிரிவு 153B, தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள் மற்றும் வலியுறுத்தல்களைக் கையாள்கிறது, அதே சமயம் பிரிவு 505-ன் படி அமைதியை சீர்குலைக்கும்  நோக்கில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட அவதூறு செயலாகும். இந்தியாவைத் துண்டாடும்படியான செயலைச் செய்பவர்கள் சட்டத்தின் பிடியில் தண்டனை பெறுவது உறுதி. விருதுகளை வென்றவர் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *