Bihar : சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு.!

Advertisements

பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதில், அதிகபட்சகமாக பெகுசாராய் தொகுதியில் 67 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், பீகார் முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது, கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக 60 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் வருகின்ற 11 ஆம்தேதியும், மேலும் வாக்குகள் வருகின்ற 14 ஆம் தேதியும் எண்ணப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *