
தமிழத்தில் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் வானம் ஓரளவு கரு மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.




