
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னணி நடிகரும் ரசிகர்களால் தளபதி என்னும் புனைப்பெயரால் அழைக்கப்படுவருமான விஜய் நடித்து மிகவும் எதிர்ப்பார்க்குள்ளாகி இருக்கும் ” ஜனநாயகன் ” திரைப்படமானது தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது ..
நடந்து முடிந்த பொங்கல் திருநாள் காலங்களில் தவெக தொணடர்களும், விஜய் ரசிகர்களும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்தனர்..
மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக ஆகிய இரு அரசாங்கங்களின் சதியே தங்கள் தலைவர் நடித்த திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போவதற்கு முக்கிய காரணம் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர் .
இந்த நிலையில் தான் வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி இந்த விவாகரத்திற்கு தீர்ப்பு வழங்கப்படும் என் உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . தவெக தொண்டர்களாலும் விஜய் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்ப்புக்குளாகியிருக்கு
கே.வி.என்.புரொடக்சன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ” ஜனநாயகன் ” படத்தை மறு ஆய்வு குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத்தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார் .
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது .வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தான் வரும் ஜனவரி 27 -ஆம் தேதி அதாவது வருகின்ற குடியரசு தினத்துக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஜனநாயகன் திரைப்பட வழக்கில் தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
ஒரு பக்கம் தங்கள் தலைவர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாக தாமதமாகி வரும் நிலையில் , தங்களின் கட்சிக்கு தலைவர் விரும்பிய விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது தங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே தொண்டர்கள் கருதுகிறார்கள் …
மேலும், ஜனநாயகன் விவகாரத்திலும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பே வரும் என தொண்டர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்..
எது எப்படியோ குடியரசு தினத்துக்கு மறு தினமான வருகிற ஜனவரி 27-ஆம் தேதியை விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் தங்களுக்குக்கான தினமாகவே எதிர்பார்த்து கொண்டு உள்ளனர் ..



