தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் – அமைச்சர்கள் உறுதிமொழி.!

Advertisements

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி  அருகே கீரமங்கலத்தில் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்ற தலைப்பில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அப்போது பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், வட மாநிலங்களில் பல தங்கள் தாய் மொழியை இழந்திருப்பதாகவும், ஆனால் தமிழ்நாடு மட்டும் தான் தாய்மொழியான தமிழைக் காத்து நிற்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, ஜெயலலிதா இறந்த பின் நாலரை ஆண்டுக்காலம் அதிமுக ஆட்சியில் இருந்ததற்குக் காரணம் பாஜக தான் எனக் கூறும் பழனிச்சாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அதே பாஜகவைவைக் கழற்றி விட்டுத் தானே வந்தார் என்று குறிப்பிட்டார்.

அதிமுக நைந்து கொண்டிருப்பது அங்கிருப்பவர்களுக்கே தெரியும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் பூட்டை வாங்கிப் பூட்டிவிடுவார் என்றும் ரகுபதி குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *