
குடியாத்தம் பிச்சனூர் ராஜீவ்காந்தி நகரில் உள்ள மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ கமலவலம்புரி விநாயகர் கோயில் மாஹா கும்பாபிஷேகம் அதிவிமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் ராஜீவ் காந்தி நகரில் அமைந்து உள்ள மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ கமல வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் அதிவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாகக் கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் அமைக்கப்பட்டு பட்டு வஸ்திரங்கள், நவதானிய வகைகள், மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்கள், பழ வகைகள், மலர் வகைகள் கொண்டு சிறப்பு யாகச் சாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள், நாதஸ்வரங்கள் முழுங்கப் புனித நீர் ஊர்வலமாகக் கொண்டு கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழுங்க மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபா ஆராதனை நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள்மீது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கமல வலம்புரி விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் ராமு, கொண்டசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் அகிலாண்டிஸ்வரி பிரேம்குமார், ஓன்றிய குழு பெருந்தலைவர் சத்தியானந்தம் ஆகியோர்களுக்கு கோயில் சார்பில் பூரண மரியாதை செலுத்தினர். இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோயில் நிர்வாகிகள் ஜெயவேலு, மொழிமாறன், சதீஷ்குமார், கிருஷ்ணன் ஆகியோர் பக்தர்களுக்கு 5 வகையான உணவினை அன்னதானமாக வழங்கப்பட்டது.

