வாழ்த்துப் பெறும் முதல்வர் விஜய்.. வரவேற்கும் காதர் மொய்தீன்.!

தமிழக முதலமைச்சர், மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவது ஆரோக்கியமான அரசியல் பண்பாடு என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொய்தீன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், மூத்த தலைவர்களின் அனுபவத்தை மதிப்பதும், அவர்களின் ஆலோசனைகளை நன்மதிப்புடன் ஏற்பதும் ஒரு சிறந்த தலைவருக்குரிய அடையாளம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக , முக. ஸ்டாலின் , வைகோ , அன்புமணி , சீமான் , திராவிட மூத்த தலைவர் கீ. வீரமணி உள்ளிட்டோரை சந்தித்த நிலையில் , தற்பொழுது இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தலைவர் காதர் மொய்தீன்- யும் சந்தித்து வாழ்த்து பெற்றார்..

மேலும் , தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , தொல். திருமாவளவன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *