
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற சி.ஜோசப் விஜய்க்கு, கேரளத்தின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே வாழ்த்து தெரிவித்துள்ளனர்..
இதுகுறித்து அவர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள பினராயி விஜயன் , ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு மிகப்பெரிய பொறுப்பாகும் என்றும், தமிழக மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை, மக்கள் நலன் ஆகிய விழுமியங்களைக் காக்கும் ஓர் அரசாங்கமாக மாறும் என நம்புகிறேன் என்றும், கேரளமும், தமிழ்நாடும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் என்றும், இரு மாநில மக்களும் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் உறுதிமொழி எடுத் துள்ளனர் என்றும், ஒருமித்த கருத்துடன், இரு மாநில மக்களும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன். என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்..
மேலும் , இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப்விஜய்க்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், தொழில்முனைவு மற்றும் தலைமுறை தலைமுறையாக தொடரும் மக்கள் இடையிலான ஆழமான உறவுகள் மூலம் ஒன்றிணைந்துள்ளன என்றும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையும், இந்தியாவும் தொடர்ந்து மிக நெருக்கமான உறவுகளையும், வலுவான கூட்டாண்மையையும் வளர்த்து வருகின்றன. இதனால் நமது எதிர்காலம் பெரும் பொருளாதார நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டதாக உள்ளது என்றும், இந்தியா–இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மையை மேலும் பலப்படுத்தி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும், தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வேண்டும் என இலங்கை மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன் எனவும், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார்.



