வரலாற்றில் சிறந்து விளங்கும் வைகை அணை பராமாிப்பு இன்றி காட்சியளிப்பது மக்கள் மத்தியில் பொிய அளவிலான மனவேதனை உண்டாக்கியது மற்றும் பாலத்தில் நடந்து செல்லும் மக்கள் ஆபத்து ஏற்படும் என்று உணர்வுடன் கடந்து செல்கிறது.மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோாிக்கை முன் வைத்து உள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வருகிறது மற்றும் பாசனத்திற்கும் 1020 கன அடி நீரும் குடிநீர் விநியோகத்திற்கு 69கன அடியும் மொத்தம் 1089கன அடி தண்ணீர் சிறிய மதகு வழியாக வெளியேற்றபட்டு தொடா்ந்து 71 கன அடி தண்ணீர் இருந்து கம்பீரமாகப் பசுமையாகக் காட்சியளிக்கிறது. அதிக அளவில் மக்கள் வந்து செல்லக்கூடிய இந்தப் பகுதி பொியவா்கள் அமா்ந்து பாா்க்க கூடிய இயற்கைஎழில் சூழ்ந்த பசுமையும் இளைஞா்களுக்கு சுற்றுலா தளமாகவும் சிறியவர்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்காவாகப் பன்முகத்தன்மை கொண்டு விளங்குகிறது.
நாள் ஒன்றுக்கு 2000 மேற்பட்ட நபர்கள் குடும்பமாக வந்து செல்கின்றனர் இந்த அணையின் மக்கள் நடந்து செல்லும் தரை பாலம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த நடை பாலத்தில் நின்று நீர் நிலைகள் வேடிக்கை பார்க்கும் பொது மக்கள் விளையாடும் சிறியவர்கள் நின்று செல்பி எடுத்துக் கொண்டாடும் வெளியூா் சுற்றுலாவாசிகள் பொிய அளவிலான ஆபத்தை உணா்கின்றனா்.இந்தப் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் இரும்பிலான கைப்பிடிகள் சேதமடைந்தும் ஓரு சில இடங்களில் இல்லாத நிலைமையும் சில இடங்களில் மர கம்புகளை வைத்துத் தடுத்து கட்டி வைத்துள்ளனா்.