கம்பத்தில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சள் நீராடல் நடந்தது.
இன்று மஞ்சள்நீராட்டு விழா நடைபெற்றது. விழாக்குழுவினர் மாலை மரியாதையுடன் ஊர்வல மாக அழைத்து வரப்பட்ட னர். நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்டு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடந்தது.
கம்பம் பார்க் திடலில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மஞ்சள் நீரை ஊற்றினார்.இன்று மாலை பகவதியம்மன் அழைப்பு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாளை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் வண்டி வேசம் ஆகியவை நடைபெறுகிறது.