படத்தை பார்த்து எப்படி இருக்கிறது என மக்கள் தான் கூறவேண்டும் – சுந்தர் சி

Advertisements
நானும் வடிவேலும்  பல ஆண்டுகளுக்கு பின்  இணைந்துளோம் படத்தை பார்த்து எப்படி இருக்கிறது என மக்கள் தான் கூறவேண்டும் ஆடியோ லாஞ்ச் விழாவில் சுந்தர் சி. 15 ஆண்டுகளாக சுந்தர் சியும் நாணும்  சேரவில்லை. பென்ஸ் மிடியா ஏ.சி.எஸ்.அருண் குமார் தயாரிப்பில் சுந்தர் சி எழுதி இயக்கிருக்கும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இந்த படத்தில் சுந்தர் சி.,யுடன் சேர்ந்து வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 24ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.இதன் திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடைபெற்றது.இதில்  இயக்குநர் சந்தர் சி வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் மைண் கோபி ,முனிஷ்காந்த்மற்றும் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் சண்முகம்,அருண்குமார் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சுந்தர் சி.
ரஜினி கமல் இருவருக்கும் சிறந்த நடிகர்கள் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள் இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய  முடிந்தது என்றார்.தனது குருநாதர் இயக்குநர் மணிவண்ணன் சாரிடமிருந்து தான்  முடியாது என்ற ஒன்று ஒன்றுமில்லை என்பதை அவரிடம் கத்துக்கொண்டேன். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்து கொண்டு செல்ல அனைத்து விதமான படங்களும் வர வேண்டும் என்ற அவர் நடிகர் சிம்பு ஒரு சகலகலா வல்லவன் என்றும் விரைவில் அவர் வெளியே வரவேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
நடிகர் வடிவேலு நடிப்பில் ஒரு  லெஜண்ட் என்றார்.மேலும் பாகுபலி,பொன்னி செல்வன் போன்ற பிரம்மாண்ட திரைப்படம் அடுத்த ஆண்டு இயக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் நடிகர் வடிவேலு சிங்க் இந்த ரைன் என்ற பாடலுடன் ஆரம்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.மாணவர்களின் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்த அவர் வின்னர் படம் போன்று கேக்கர்ஸ் படம் வெற்றிப்படமாக அமையும் என்றும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை படம் எடுக்கும் இயக்குநர்கள் ஒரு சிலரே அதில் சுந்தர் சி யும் ஒருவர்.சிவாஜி குறித்து மாணவர் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் தான் எனக்கு பிடிக்கும் என பதில் அளித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *