
மகளிர்களுக்கு இலவச பேருந்து விட்டுள்ளோம் என மார்தட்டிக் கொண்ட திமுக அரசுப் பேருந்தை விடாமலே சாதித்ததாகப் பொய்யைக் கூறி கொண்டுள்ளது என முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் விமர்சித்துள்ளார்.
உத்தரமேரூர் தொகுதிகளில், லோக்சபா தேர்தல் வருவதை முன்னிட்டு தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது, இந்தநிலையில் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் எங்கும் தெருமுனை பிரச்சார கூட்டத்தை நடத்த வேண்டும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
அதன்படி உத்தரமேரூர் வட்டம்களியாம்பூண்டி, இளநகர் உள்ளிட்டமத்திய ஒன்றியங்களில் திமுக அரசின் போக்கைக் கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது வி.சோமசுந்தரம் பேசும்போது, விடியாத் திமுக அரசு மக்களை ஏமாற்றும் அரசாகத்தான் உள்ளது.மகளிர்களுக்கு இலவச பேருந்து விட்டுள்ளோம் என மார்தட்டிக் கொண்ட திமுக அரசுப் பேருந்தை விடாமலேயே சாதித்ததாகப் பொய்யைக் கூறி கொண்டுள்ளது.என முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் விமர்சித்தார்.
இக்கூட்டத்தின்போது, உத்தரமேரூ


