EPS: மத துவேச கருத்துகளைத் தவிர்க்கப்பட வேண்டும்., பிரதமர் மோடிக்கு எதிராக இ.பி.எஸ்அறிக்கை!

சென்னை: நாட்டின் பிரதமர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். பா.ஜ., கூட்டணியிலிருந்து அ.தி.மு.க., வெளியேறியபிறகு பிரதமர் மோடிக்கு எதிராக இ.பி.எஸ்., வெளியிட்ட முதல் அறிக்கை இதுதான்.

தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லிம் மக்கள்குறித்த பிரதமரின் பேச்சு தொடர்பாக இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் தலைவர்கள் மத துவேச கருத்துகளை அரசியலுக்காகத் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டின் பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல.

இஸ்லாமிய மக்களின் மனதை புண்படும்படி கூறப்படும் இது போன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் தலைவர்களின் சர்ச்சைக் கருத்துகள் சிறுபான்மை மக்களின் மனதில் அச்சத்தை ஏ்றபடுத்துவதுடன், மத உணர்வுகளைத் தூண்டுகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக மத துவேச கருத்துகளை நாட்டின் நலனிற்காக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்காகக் கண்ணியம் தவறிய மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் இந்திய இயைாண்மைக்கு எதிரானது. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *