V. Senthil Balaji: 10-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Advertisements

10-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

Advertisements

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 22-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *