V. Senthil Balaji Bail: சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவைச் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்…

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவைச் சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றமே ஜாமின் மனுவை விசாரிக்கும் என அறிவித்துள்ளார்.

சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் எனத் தெரிவித்த நிலையில் முறையீட்டுக்காகச் செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் சிறப்பு நீதிமன்றம் விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *