உத்தரப் பிரதேசத்தின் பிரம்மாண்ட கங்கா விரைவுச் சாலை.!

உத்தரப் பிரதேசத்தின் மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை பன்னிரண்டு மாவட்டங்களின் வழியாகக் கங்கையாற்றின் கரையோரத்தில் 594 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறு வழிவிரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

36 ஆயிரத்து 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தச் சாலையின் திறப்பு விழா ஹர்தோயில் நடைபெற்றது. மீரட்டில் இருந்து பிரயாக் ராஜுக்குச் செல்ல இதற்கு முன் 12 மணி நேரமானது.

இந்த விரைவு நெடுஞ்சாலையால் பயண நேரம் ஆறு மணி நேரமாகக் குறைந்துள்ளது. இந்தச் சாலையின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சாலையைத் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *