ஈரானுக்கு எதிராக டிரம்ப் வைத்த கோரிக்கையை ஏற்ற மன்னர் சார்லஸ்.!

ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று தான் கூறியதை பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தானும் பிரிட்டன் மன்னர் சார்லசும் ஒரு விருந்தில் பங்கேற்றதாகத் தெரிவித்தார். அப்போது ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்கிற தனது நிலைப்பாட்டை மன்னர் சார்லசும் ஆதரித்ததாகக் கூறினார். நேட்டோவும் அதனுடைய கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் சேர்ந்திருக்க வேண்டியதன் தேவையையும் மன்னர் சார்லஸ் வலியுறுத்தியதாகவும் டிரம்ப் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் 36ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 594 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள கங்கை விரைவு நெடுஞ்சாலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *