வன்முறையில் ஈடுபடுவதுதான் குற்றமே – அசாதுதீன் ஓவைசி பேச்சு..!

Advertisements

வன்முறையில் ஈடுபடுவதுதான் குற்றமே ஒழிய, ஐலவ் முகமது என்று முழக்கமிடுவது எப்படிக் குற்றமாகும் என்று ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் செய்தியாளரிடம் பேசிய அவர், இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் கடவுளைப் போற்றி வணங்கும் வழிபாட்டுரிமை உள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 25ஆம் கூற்றில் வழிபாட்டுரிமை உள்ளதைச் சுட்டிக்காட்டினார். அப்படி இருக்கையில் ஐலவ் முகமது என்று முழக்கமிடுவது எப்படிக் குற்றமாகும்? என்று வினவினார்.

அதேநேரத்தில் வன்முறையில் ஈடுபட்டால் அது குற்றமாகும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *